கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
பெண்ணிடம் வரதட்சணை கேட்ட கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நேருநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் தர்ஷினி (வயது25). இவருக்கும் சென்னை அயப்பாக்கம் மோகன் வேலாயுதம் மகன் கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது தர்ஷினிக்கு 50 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு 10 பவுன் நகையும், ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் கொடுத்தார்களாம். திருமணம் முடிந்து முதல் வாரத் திலேயே அதிக நகை வாங்கி வரவில்லை என்று கூறி கார்த்தி கேயன் கொடுமைபடுத்தினாராம். மேலும், ரூ.10 லட்சம் கூடுதல் வரதட்சணையாகவும், தொழில் தொடங்க ரூ.20 லட்சமும் வாங்கி வரும்படி கூறி கொடுமைபடுத்தி வீட்டைவிட்டு விரட்டிவிட்டாராம். இதற்கு அவரின் தாய், தந்தை, அக்காள் ஆகியோர் உடந்தையாக இருந்தார்களாம். இந்தநிலையில் தர்ஷினிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னரும் சேர்ந்து வாழமறுத்து வந்தாராம். இதுகுறித்து தர்ஷினி ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். கார்த்திகேயன் உள்பட 4 பேர் மீது வழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story