தர்மபுரி மாவட்டத்தில் 17 போலீஸ் நிலையங்களில் பெண்கள், குழந்தைகள் உதவி மையம்- சூப்பிரண்டு கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்


தர்மபுரி மாவட்டத்தில் 17 போலீஸ் நிலையங்களில் பெண்கள், குழந்தைகள் உதவி மையம்- சூப்பிரண்டு கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 July 2021 10:33 PM IST (Updated: 15 July 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 17 போலீஸ் நிலையங்களில் பெண்கள், குழந்தைகள் உதவி மையத்தை சூப்பிரண்டு கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 17 போலீஸ் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் பெண்கள், குழந்தைகள் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க விழா தர்மபுரி ஆயுதப்படை திருமண மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கி பெண்கள், குழந்தைகள் உதவி மையத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் பெண்கள் உதவி மைய பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஸ்கூட்டர், மடிக்கணினி ஆகியவை வழங்கப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி மைய தொலைபேசி எண் 181 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அட்டைகள் வெளியிடப்பட்டன.
மாவட்ட சமூக நல அலுவலர் நாகலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் இந்தியா ஆகியோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் துறை சார்ந்து பின்பற்றவேண்டிய பல்வேறு விதிமுறைகள் குறித்து பெண் போலீசாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள்.

Next Story