மாவட்ட செய்திகள்

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 1412 பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine for 1412 people in Sultanate Union

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 1412 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 1412 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 1,412 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 1,412 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா தடுப்பூசி 

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா 2 -வது அலை பரவலை தடுக்க சுகதாரம், வருவாய் மற்றும் உள்ளாட்சி துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதனால் இங்கு தொற்று பரவல் குறைந்து உள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. 

கடந்த 2 நாட்களில் கிருஷ்ணாபுரம், போகம்பட்டி, வா.சந்திராபுரம் ம்றறும் வதம்பச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. 

1,412 பேருக்கு செலுத்தப்பட்டது

இதில் ஜே.கிருஷ்ணாபுரத்தில் 500 பேர், போகம்பட்டியில் 500 பேர், வா.சந்திராபுரத்தில் 233 பேர், வதம்பச்சேரியில் 150 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

இதுதவிர கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என மொத்தம் 1,412 பேருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் 412 பேர் கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த பணியில்  அரசு டாக்டர்கள் பவித்ரா, சுந்தர், சபரிராம், கிருஷ்ண பிரபு விஜய் மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அருப்புக்கோட்டையில் 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
2. 66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு
18 வயதிற்கு மேற்பட்டோரில் 66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
3. ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- கலெக்டர் சந்திரகலா தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 352 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 21 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று கலெக்டர் சந்திரகலா தெரிவித்து உள்ளார்.
4. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசு
மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக சுகந்திவடிவேல், துணைத்தலைவராக எம்.டி.ஜி.கதிர்வேல் இருந்து வருகின்றனர்.
5. மாவட்டத்தில் இதுவரை- 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி -கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.