சேரங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


சேரங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 15 July 2021 10:46 PM IST (Updated: 15 July 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

சேரங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

பந்தலூர்

சேரங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறை சார்பில் முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொளப்பள்ளியில் ரூ.26 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சோலார் டிரையர் பணி, நெல்லியாம்பதி பகுதியில் ரூ.5.1 லட்சம் செலவில் கட்டப்பட்ட கம்பி வலையால் ஆன நிலச்சரிவு தடுப்புச்சுவர், அதே பகுதியில் ரூ.8.3 லட்சம் மதிப்பில் நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்க கம்பி வலையால் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர், கான்கிரீட்டால் போடப்பட்ட தடுப்புச்சுவர் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

குடிநீர் வினியோகம் தொடக்கம்

முன்னதாக சேரம்பாடி சுங்கம், பாலவாடி வளைவு, நெல்லிகுன்னு ஆகிய பகுதிகளில் ஜே.ஜே.எம். திட்டம் மூலம் குடிநீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு, குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து குடிநீர் வினியோகத்தை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். 

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணன், பந்தலூர் தாசில்தார் தினேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், என்ஜினீயர்கள் ரமேஷ்குமார், ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story