நாய்களிடம் இருந்து தப்பிக்க 30 அடி உயர மரத்தில் ஏறிய பூனை
ஊட்டியில் நாய்களிடம் இருந்து தப்பிக்க 30 அடி உயர மரத்தில் பூனை ஏறியது.
ஊட்டி
ஊட்டி கீழ் கோடப்பமந்து பகுதியில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் தெருநாய்கள் வளர்ப்பு பூனை ஒன்றை விரட்டியதால், அச்சமடைந்த பூனை அருகே இருந்த 30 அடி உயரமுள்ள மரத்தில் ஏறி தஞ்சம் அடைந்தது.
நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக மரத்தில் ஏறிய பூனை கீழே இறங்க முடியாமல் தவித்தது. 2 நாட்களாக கீழே இறங்க முடியாமலும், உணவு இல்லாமலும் இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேம்குமார் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று வளர்ப்பு பூனையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மரத்தில் ஏணி வைத்து பூனையை மீட்டு அட்டை பெட்டியில் கொண்டு வந்து கீழே இறக்கினர். பாதுகாப்பாக பூனை மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story