கோத்தகிரி அருகே மின்வேலியில் தவறி விழுந்த மூதாட்டி சாவு
கோத்தகிரி அருகே மின்வேலியில் தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள தீனட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் என்ற குணராஜ் (வயது 45). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் காய்கறி பயிரிட்டிருந்தார். காட்டு பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை நாசம் செய்து வந்ததால் தோட்டத்தை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளார்.
இந்த நிலையில் குணராஜ் தோட்டத்து வழியாக ஒற்றயையடி பாதையில் கூக்கல்தொரை ஜீவாநகரை சேர்ந்த ஜானகி (65) உள்பட சிலர் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர் திடீரென கால் தவறி மின்வேலி மீது விழுந்தார். இதில் அவர் மீது மின்சாரம் தாக்கியது. தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஜானகியை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.இதுகுறித்து குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், மின்வாரிய கோட்ட பொறியாளர் சேகர், கோத்தகிரி செயற்பொறியாளர் மாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இதுதொடர்பாக தோட்ட உரிமையாளர் குணராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story