15 பேர் மீது வழக்கு


15 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 July 2021 11:02 PM IST (Updated: 15 July 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

வாகனங்களின் கண்ணாடிகளை நொறுக்கிய 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இளையான்குடி, 
இளையான்குடி அருகே உள்ள மேலாயூர் கிராமத்தைச் சேர்ந்த சத்ரு மனைவி வாணி (வயது39). இவருடைய குடும்பத்துக்கும் இதே ஊரைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் அழகர்சாமி மகன்கள் அஜித் (20), பிரபு(21) மற்றும் இவர்களது உறவினர்கள் கும்பலாக வாணியின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரிகள்,  வேன் ஆகியவற்றின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி உள்ளனர். 
இதுகுறித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி அஜித் உள்பட 15பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story