கடையின் பூட்டை உடைத்து டி.வி.-கேமரா திருட்டு


கடையின் பூட்டை உடைத்து டி.வி.-கேமரா திருட்டு
x
தினத்தந்தி 16 July 2021 12:47 AM IST (Updated: 16 July 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

கடையின் பூட்டை உடைத்து டி.வி.-கேமரா திருட்டு நடந்துள்ளது.

கரூர்
கரூர் அருகே உள்ள கோவிந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). இவர் ராமகவுண்டனூர் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலையை முடித்துவிட்டு இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து நேற்று முன்தினம் காலை மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி.டிவி மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நிகான் கேமரா உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story