திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது


திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 July 2021 12:50 AM IST (Updated: 16 July 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டார்.

கரூர்
கரூர் நகர உட்கோட்ட தனிப்பிரிவு போலீசார் நேற்று கரூர் 5 ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பசுபதிபாளையம் நடுத்தெருவை சேர்ந்த பிரகாஷ் (வயது 24), தாந்தோன்றிமலை, வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்த வசந்தகுமார் (24) ஆகியோரை சந்தேகத்தின்படி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்கள் நகை, பணம் உள்ளிட்ட 7 திருட்டு வழக்குகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 பவுன் தங்க நகைகள், 4 இருசக்கர வாகனங்கள், டி.வி., கேமரா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பாராட்டினார்.

Next Story