அறக்கட்டளை நிர்வாக இயக்குனரை தாக்கி, கார் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு
அறக்கட்டளை நிர்வாக இயக்குனரை தாக்கி, கார் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 52). இவர் ஒரு அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராமசாமியின் மகன் கருணாநிதிக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கருணாநிதி, தேவேந்திரனை கல்லால் தாக்கி, அவருடைய கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தேவேந்திரன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தேவேந்திரன் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கருணாநிதி மீது சப்-இன்ஸ்பெக்டர் மலரழகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story