5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; 3 சிறுவர்கள் மீது போக்சோவில் வழக்கு
5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 3 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர்:
பாலியல் தொந்தரவு
அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். அந்த சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த முறையே 6, 7, 8 வயதுடைய 3 சிறுவர்கள், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர், அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போக்சோ சட்டத்தில் வழக்கு
அதன்பேரில் 3 சிறுவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 வயது சிறுமிக்கு 3 சிறுவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story