ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தளவாய்புரம்,
சேத்தூர் அருகே உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி நடராஜர், பெருமாள், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி மற்றும் அம்மன் சப்பரத்தில் கோவிலை வலம் வந்தனர். இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை அறங்காவலர் ரத்னகுமார், செயல் அலுவலர் மகேந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story