துங்கா அணை 2-வது முறையாக நிரம்பியது - வினாடிக்கு 41,700 கனஅடி நீர் வெளியேற்றம்


துங்கா அணை 2-வது முறையாக நிரம்பியது - வினாடிக்கு 41,700 கனஅடி நீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 16 July 2021 2:04 AM IST (Updated: 16 July 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

துங்கா அணை 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 41,700 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் துங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சிவமொக்கா:
  
துங்கா அணை

  சிவமொக்கா மாவட்டம் காஜனூரில் உள்ளது, துங்கா அணை. இந்த அணையின் நீர்மட்டம் 588.24 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது.

  இதனால் கடந்த மாதம் இறுதியில் துங்கா அணை நிரம்பியது. இதனால் அணையின் 21 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக துங்கா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

2-வது முறையாக நிரம்பியது

  இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக துங்கா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

  இந்த நிலையில் துங்கா அணை நேற்று காலை 2-வது முறையாக நிரம்பியது. இதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே 21 மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு

  அதாவது வினாடிக்கு 41 ஆயிரத்து 700 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த நீர் அப்படியே மதகுகள் வழியாக துங்கா ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் துங்கா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

  இந்த அணை சிவமொக்கா நகரை ஒட்டி பாய்ந்தோடி வருகிறது. தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story