மைசூருவில் ஓட்டல் ஊழியரை நான் தாக்கினேனா? - நடிகர் தர்ஷன் விளக்கம்


மைசூருவில் ஓட்டல் ஊழியரை நான் தாக்கினேனா? - நடிகர் தர்ஷன் விளக்கம்
x
தினத்தந்தி 16 July 2021 2:09 AM IST (Updated: 16 July 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் ஓட்டல் ஊழியரை தாக்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து நடிகர் தர்ஷன் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு:
  
யாரும் நம்ப வேண்டாம்

  நடிகர் தர்ஷன் பெயரில் ரூ.25 கோடி வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ய முயற்சி நடந்ததாக தகவல் வெளியானது. இதில் அருணாகுமாரி என்ற பெண் ஈடுபட்டதாக தர்ஷனே கூறினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நடிகர் தர்ஷன் மைசூருவில் உள்ள ஒரு ஓட்டல் ஊழியரை தாக்கியதாக புதிய புகார் ஒன்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

  இதுகுறித்து நடிகர் தர்ஷன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  வங்கி கடன் மோசடி முயற்சி விஷயத்தில் அருணாகுமாரி கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி எனது வீட்டிற்கு வந்தார். இந்த மோசடி முயற்சியில் உங்களது எந்த தவறும் இல்லை என்று கூறி அவரை அனுப்பி வைத்தேன். இந்த விஷயத்தில் இந்திரஜித் லங்கேஷ் என்ன வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும். இந்த மோசடி முயற்சியில் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

காலஅவகாசம்

  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். அதுவரை இது குறித்து விளக்கமாக பேச கால அவகாசம் வேண்டும் அல்லவா?. மைசூருவில் ஓட்டல் ஊழியர் மீது நான் தாக்குதல் நடத்தி உள்ளேன் என்று இந்திரஜித் லங்கேஷ் குற்றம்சாட்டியுள்ளார். அது நிரூபிக்கப்படவில்லை. அவர் என் மீது கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்கட்டும்.

  ஓட்டலுக்கு சென்ற நேரத்தில் நான் ஏதோ ஒரு விஷயத்திற்காக கோபப்பட்டு பேசி இருக்கலாம். ஆனால் நான் யாரையும் தாக்கவில்லை. எனக்கு எதிராக கூறப்படும் இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இது சரியல்ல.
  இவ்வாறு நடிகர் தர்ஷன் கூறினார்.

Next Story