வீட்டை சூறையாடி பெண்களிடம் நகை பறிப்பு; 2 பேர் கைது
பாளையங்கோட்டை அருகே வீட்டை சூறையாடி பெண்களிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே முத்தூரில் கோவில் கொடை விழா நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே ஊரைச் சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் பூபதி சுபாஷ், உறவினரான சூர்ய சுந்தர் ஆகியோரிடம் சிலர் தகராறு செய்தனர். இதைக்கண்ட சுடலைக்கண்ணு அவர்களை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த கும்பல் சுடலைக்கண்ணு வீட்டை சூறையாடி, வீட்டில் இருந்த ரூ.2 லட்சத்தை எடுத்தனர். இதை தடுக்க முயன்ற 2 பெண்களிடம் அந்த கும்பல் 7 பவுன் தங்க சங்கிலிகளை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் சுடலைக்கண்ணு தம்பி புதியமுத்து காயம் அடைந்தார்.
இதுதொடர்பாக சிவந்திபட்டி போலீசார் சிவந்திபட்டியை சேர்ந்த சுபாஷ், கோட்டியப்பன், வெங்கடேஷ், மணி, முத்தூரைச் சேர்ந்த முருகேஷ் என்ற வேல்முருகன், சுப்பிரமணி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சண்முகம், ராம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், குலவணிகர்புரம் சிவா, புதுப்பேட்டை பேராச்சி ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுப்பிரமணி (27) உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story