நெல்லையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஆய்வு


நெல்லையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 16 July 2021 3:39 AM IST (Updated: 16 July 2021 3:39 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஆய்வு செய்தார்.

நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் போலீஸ், அரசு ஊழியர்கள் மீதான மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகள் விசாரணை நெல்லை வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. வழக்குகளை மனித உரிமைகள் ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தபோது, பா.ஜனதாவுக்கு எதிராக கோஷமிட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கு உள்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ெமாத்தம் 38 வழக்குகளை அவர் விசாரித்தார். 

Next Story