முதியோர் உதவித்தொகை கேட்டு தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு


முதியோர் உதவித்தொகை கேட்டு தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 July 2021 4:03 AM IST (Updated: 16 July 2021 4:03 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் முதியோர் உதவித்தொகை கேட்டு தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி:
தென்காசி கீழப்புலியூரைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பெருமாள் அம்மாள் (வயது 68). இவர் தனக்கு கடந்த சில மாதங்களாக அரசின் முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று கூறி, நேற்று தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று, பெருமாள் அம்மாளை தடுத்து நிறுத்தி அவரது தலையில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

இதற்கிடையே அரசு போக்குவரத்து கழக பணிமனையில் காமராஜர் பிறந்த நாள் விழாவுக்காக வந்த பழனி நாடார் எம்.எல்.ஏ., மூதாட்டி பெருமாள் அம்மாளிடம் கனிவுடன் குறையை கேட்டறிந்தார். பின்னர் அவருக்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். மேலும் அவர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 ஆயிரத்தை பெருமாள் அம்மாளிடம் வழங்கினார். முதியோர் உதவித்தொகை கேட்டு, மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story