காட்டுப்பகுதியில் பதுக்கிய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆலங்குளம் அருகே காட்டுப்பகுதியில் பதுக்கிய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த அத்தியூத்து விலக்கில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, ஆலங்குளம் வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே வட்ட வழங்கல் அலுவலர் ஜெட்லெட் ஜெயா, வருவாய் ஆய்வாளர் பேச்சி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது காட்டுப்பகுதியில் 200 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 10 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை ஆலங்குளம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்தவர்கள் யார்? அவற்றை கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்தனரா? என உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story