பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
கடைகள், வணிக வளாகங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே அங்கு பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடைகள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகளில் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரும் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடித்து, 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படுகின்றனவா? என சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
கண்காணிப்புக்குழுக்களின் ஆய்வின்போது அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி இருப்பதும் தெரியவந்தால் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசின் நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story