போடி பகுதியில் தொடர்மழை கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு


போடி பகுதியில் தொடர்மழை கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
x

போடி பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

போடி:
போடி மற்றும் அதை சுற்றியுள்ள மலைப்பகுதிகளான குரங்கணி, முந்தல், போடி மெட்டு, மேலப்பரவு, சிறைக்காடு, ஊத்தாம்பாறை, கொட்டக்குடி ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து கொட்டக்குடி ஆற்றில் கட்டப்பட்டுள்ள பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் பெருகெடுத்து ஓடுகிறது. இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story