ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்


ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
x
தினத்தந்தி 16 July 2021 5:28 PM IST (Updated: 16 July 2021 5:28 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பகுதியில் 8 அங்கன்வாடி மையங்களுக்கு குடிநீ்ர் வசதி ஏற்படுத்தி கொடுப்பது என ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் 8 அங்கன்வாடி மையங்களுக்கு குடிநீ்ர் வசதி ஏற்படுத்தி கொடுப்பது என ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களின் சாதாரணக் கூட்டம் நேற்று மடத்துக்குளம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத்தலைவர் காவியா அய்யப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் மகேந்திரன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஈஸ்வரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிபபணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் ஒன்றிய ஊராட்சிகளில் உள்ள 8 அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி அமைத்தல், 3 ஊராட்சிகளில் கழிவு நீர் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட 77 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ் நிர்வாகம், சதீஸ்குமார் மண்டலம், விவேகானந்தம் சத்துணவு, நாகலிங்கம் ஊராட்சிகள், உதவிப் பொறியாளர்கள் கார்த்திக் குமார், கார்த்திக் ராஜா, எத்திராஜ் தணிக்கை, சீனிவாசன் மண்டலம், சாந்தி மண்டலம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

---
ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

Next Story