குப்பையில் கிடக்கும் குப்பைத்தொட்டிகள்


குப்பையில் கிடக்கும் குப்பைத்தொட்டிகள்
x
தினத்தந்தி 16 July 2021 5:38 PM IST (Updated: 16 July 2021 5:38 PM IST)
t-max-icont-min-icon

குப்பையில் கிடக்கும் குப்பைத்தொட்டிகள்

குடிமங்கலம்
குடிமங்கலம் ஒன்றியம் அணிக்கடவு ஊராட்சிக்குட்பட்ட ராமச்சந்திராபுரம் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை போடுவதற்கு பயன்படுத்த வேண்டிய குப்பைத்தொட்டிகளை குப்பையில் கிடக்கும் அவலம் அரங்கேறி உள்ளது. குப்பைகளை மக்கும்குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மேலாண்மை செய்வதற்கென அரசு பெருமளவு நிதி ஒதுக்கீடு வரும் நிலையில் இதுபோன்ற அலட்சியப் போக்கால் பெருமளவு நிதி வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் வீசிச் செல்கின்றனர். அதனை அப்புறப்படுத்துவதிலும் அலட்சியம் காட்டப்படுவதால் குப்பைகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.மழைக்காலங்களில் நீர் வழித்தடங்களில் கொட்டப்படும் குப்பைகளால் கழிவுநீர் செல்லும் பாதைகளில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதுபல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கும் காரணம் ஆகிறது. எனவே ஊராட்சி நிர்வாகங்கள் குப்பைகளை முறையாக கையாள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். குப்பைத்தொட்டிகள் பராமரிக்கப்படாமல் குப்பையில் கிடப்பதால் குப்பைத் தொட்டிகள் ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகி வருகிறது. ஊராட்சி நிர்வாகங்கள் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து குப்பைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

---

Next Story