தேனி ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 64 பேர் ரத்ததானம்
தேனி ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 64 பேர் ரத்ததானம் செய்தனர்.
தேனி:
தேனி ஆயுதப்படை பிரிவு வளாகத்தில் தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்து ரத்ததானம் வழங்கினார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு ரத்தம் சேகரித்தனர். இதில் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 64 பேர் ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story