23 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது


23 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 16 July 2021 9:23 PM IST (Updated: 16 July 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

23 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது

துடியலூர்

ஆனைகட்டியில் மின் கம்பத்தை அகற்ற ரூ.23 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது 

ரூ.23 ஆயிரம் லஞ்சம்

கோவையை அடுத்த ஆனைக்கட்டியை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 45). இவருக்கு சொந்தமான இடத்தின் அருகே இடையூறாக இருந்த மின்கம்பம் உள்ளது. 

அதை அகற்றி சற்று தள்ளி வைக்க சின்னதடாகம் மின்வாரிய அலுவலகத்தில் ஜெயந்தி விண்ணப்பித்தார். 

இந்த நிலையில் அங்கு பணியில் இருந்த மின்வாரிய உதவி என்ஜினீயர் சுரேஷ்பாபு (வயது 49) அரசுக்கு செலுத்தவேண்டிய தொகையுடன் சேர்த்து ரூ.80 ஆயிரம் கேட்டுள்ளார். 

இது பற்றி ஜெயந்தி கேட்ட போது லஞ்சமாக ரூ.23 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

உதவி என்ஜினீயர் கைது

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயந்தி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த அறிவுரையின் பேரில் ஜெயந்தி, சின்ன தடாகம் மின்வாரிய உதவி என்ஜினீயர் சுரேஷ்பாபுவிடம் ரூ.23 ஆயிரம் லஞ்சப் பணத்தைக் கொடுத்தார். 

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சுரேஷ் பாபுவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். 

இதையடுத்து பன்னிமடையில் உள்ள என்ஜினீயர் சுரேஷ்பாபுவின் வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை போலீசார்  சோதனை நடத்தினர். 

அப்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



Next Story