இபதிவு பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதி


இபதிவு பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதி
x
தினத்தந்தி 16 July 2021 10:04 PM IST (Updated: 16 July 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

இபதிவு பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதி

பொள்ளாச்சி

கேரளாவில் கொரோனா, ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால்  இ-பதிவு பெற்ற வாகனங்களுக்கு மட்டும் தமிழகத்திற்குள் அனுமதி அளிக்கப்படுகிறது. சோதனைச்சாவடிகளில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் ஆய்வு செய்தார்.

ஜிகா வைரஸ்

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த தால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்தது. 

ஆனால் கடந்த மாதம் முதல் தொற்று எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் குறைந்தது. இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கேரளாவை கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் மிரட்டி வருகிறது. இதனால் தமிழக-கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப் பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் இ-பதிவு பெற்ற வாகனங்கள் மட்டும் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

சப்-கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி ஆகிய சோதனைச்சாவடிகளில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, அவர், கேரளாவில் இருந்து இ-பதிவு பெற்று வரும் வாகனங்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். 

மேலும் அவர், 24 மணி நேரமும் சோதனைச்சாவடியில் கண்கா ணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். 

இ-பதிவு இல்லாத வாகனங்க ளை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது

வாகன தணிக்கை

கேரளாவில் ஜிகா வைரசால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோய் தமிழக பகுதியான கோவை மாவட்டத்திற்குள் பரவலை தடுக்கும் வகையில் மாநில எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. 

இதில், மருத்துவ அலுவலர், வருவாய் துறை அலுவலர், ஊரக வளர்ச்சி துறை மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

தனிமைப்படுத்தி சிகிச்சை

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கேரளா சென்று வருபவர்கள் முறையான இ-பதிவு பெற்று இருக்க வேண்டும்.

 சோதனைச்சாவடி வழியாக வருபவர்களின் உடல் வெப்பநிலை கண்டறியும் போது காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட் டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்


Next Story