மணல் கடத்திய வாலிபர் கைது
மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் நேற்றுமுன்தினம் ஓம்சக்திநகர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனையிட்ட போது அதில் 5.80 டன் கிராவல் வகை மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இதுதொடர்பாக லாரியில் உள்ள ஆவணங்களை பரிசோதித்தபோது சாதாரண கற்கள் ஏற்றிவருவதற்கான அனுமதி பெற்று கிராவல் வகை மணல் ஏற்றி வந்துள்ளதை கண்டறிந்தார்.
இதனை தொடர்ந்து முதலூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் கதிரேசன் (வயது31) என்பவரை பிடித்து லாரியுடன் கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்து லாரி உரிமையாளர் ராஜேஷ் என்பவரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story