எருமப்பட்டியில் தச்சு தொழிலாளி வீட்டில் 8¼ பவுன் நகை திருட்டு
எருமப்பட்டியில் தச்சு தொழிலாளி வீட்டில் 8¼ பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எருமப்பட்டி,
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் உள்ள ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி பரிமளம் (வயது 48). இவர்களுக்கு சிவக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி தண்டபாணி வேலை நிமித்தமாக நாமக்கல்லுக்கு சென்று விட்டார். இதையடுத்து பரிமளம் மகன் திருமணத்துக்கு ஜாதகம் பார்க்க நேற்று அய்யர் மேடு என்ற பகுதிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை திருட்டு
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 8¼ பவுன் நகை திருட்டு போனதை அறிந்தார். பின்னர் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தச்சு தொழிலாளி வீட்டில் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story