ராசிபுரம், நாமக்கல் பகுதிகளில் மோட்டார்சைக்கிள்கள் திருடியவர் கைது 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


ராசிபுரம், நாமக்கல் பகுதிகளில் மோட்டார்சைக்கிள்கள் திருடியவர் கைது 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 July 2021 10:46 PM IST (Updated: 16 July 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம், நாமக்கல் பகுதிகளில் மோட்டார்சைக்கிள்கள் திருடியவர் கைது 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

ராசிபுரம்,

ராசிபுரம் பகுதியில் கடந்த 2 மாதங்களாக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போனது. இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடி சென்றவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், தங்கம் மற்றும் போலீசார் ராசிபுரம் அருகே சேந்தமங்கலம் பிரிவு ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். 
அதில் அந்த வாலிபர் ராசிபுரம் பகுதியில் 6 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதையொட்டி அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பது தெரியவந்ததால் அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
அவரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட வாலிபர் நெய்வேலி விவேகானந்தா தெருவை சேர்ந்த வைத்தியநாதன் மகன் தியாகராஜன் (வயது 34) என்பது தெரியவந்தது. மேலும் நாமக்கல் பகுதியிலும் மோட்டார் சைக்கிளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட தியாகராஜன் கொடுத்த தகவலின் பேரில் ராசிபுரம் மற்றும் நாமக்கல் பகுதியில் திருடிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story