பள்ளிகொண்டா அருகே 41 வயது தொழிலாளிக்கு 16 வயது மாணவியுடன் திருமணம்


பள்ளிகொண்டா அருகே 41 வயது தொழிலாளிக்கு 16 வயது மாணவியுடன் திருமணம்
x
தினத்தந்தி 16 July 2021 10:50 PM IST (Updated: 16 July 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா அருகே 41 வயது தொழிலாளிக்கு 16 வயது மாணவியுடன் திருமணம்

அணைக்கட்டு

அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டாவை அடுத்த ஒக்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41).  இவருக்கும் கழனிபாக்கம் கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய 12-ம் வகுப்பு மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை அங்குள்ள பீமநாத ஈஸ்வரர் கோவிலில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இதை அறிந்த ஊர் நல அலுவலர் விஜயலட்சுமி இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருமணமான மண மக்களையும், இரு வீட்டாரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 41 வயதுடைய ஒருவருக்கு, 16 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்ததற்காக மாணவியின் தந்தை மீதும், மணமகன் சுரேஷ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சிறுமியை திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய அவரது உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story