வேலூர் கோட்டை சுற்றுச்சுவரில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை முயற்சி
கோட்டை சுற்றுச்சுவரில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை முயற்சி
வேலூர்
வேலூர் கோட்டையின் முன்பகுதி சுற்றுச்சுவர் நடைபாதையில் நேற்று காலை 11-30 மணியளவில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். தற்கொலை செய்யும் எண்ணத்துடன் வந்திருந்த அவர் திடீரென சுற்றுச்சுவரில் இருந்து கீழே குதித்தார். அகழிக்குள் விழாமல் கோட்டை மதில் கீழ் சுவர்களில் உள்ள புதரில் விழுந்தார். இதில், அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வேலூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து கயிறு கட்டி மூதாட்டியை மீட்டனர். மூதாட்டி பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டார். மூதாட்டிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூதாட்டி தற்கொலைக்கு முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் கோட்டையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story