கே.வி.குப்பம் அருகே செல்போன் பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது


கே.வி.குப்பம் அருகே செல்போன் பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 16 July 2021 11:06 PM IST (Updated: 16 July 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

கே.வி.குப்பம் அருகே செல்போன் பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அருகே மேல்மாயில் ஊராட்சி, காங்குப்பத்தான் பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ஜானகிராமன் (வயது 19). இவர் பெருமாங்குப்பம் கூட்டு ரோடு சாலையில் கடந்த 7-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறித்து சென்று விட்டனர். 
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். 

இந்த நிலையில் நேற்று செல்போன் பறித்து சென்ற பூசாரிவலசை கிராமத்தைச் சேர்ந்த சந்துரு (22), பிரபாகரன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் பாலாஜி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story