விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி


விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி
x
தினத்தந்தி 16 July 2021 11:11 PM IST (Updated: 16 July 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு சவுதி அரேபியா தமிழ் அமைப்பு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

சிவகங்கை,

 மானாமதுரை அடுத்த டி.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்வரன் என்பவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அங்கு நடந்த ஒரு கார் விபத்தில் இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது மனைவி சவுந்தரியா சிவகங்கை மாவட்ட கலெக்டரிடம் சவுதி அரேபியாவில் பணிபுரிந்த தன்னுடைய கணவர் கார் விபத்தில் இறந்துவிட்டதாகவும் அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த விவரத்தை அறிந்த சவுதி அரேபியா நாட்டில் ரியாத்தில் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தினர் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். அத்துடன் அவரது குடும்பத்தினர் வறுமையில் இருப்பதை அறிந்து அவருக்கு வெளிநாடு வாழ் தமிழக நலச்சங்கத்தின் சார்பில் ரூ.40 ஆயிரம் மற்றும் தையல் எந்திரம் ஆகியவைகளை வழங்கினார்கள். இந்நிலையில் சவுதி அரேபியாவிலிருந்து சொந்த ஊரான சிவகங்கையை அடுத்த சக்கந்தி கிராமத்திற்கு வந்திருந்த அந்த அமைப்பை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் டி.ஆலங்குளம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்று அங்கிருந்த சவுந்தர்யாவிடம் பணம் மற்றும் தையல் எந்திரத்தை நேரில் வழங்கினார்.



Next Story