பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பேரிகார்டுகள் இயங்காததால் நீண்ட நேரம் காத்திருக்கும் வாகனங்கள்


பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பேரிகார்டுகள் இயங்காததால் நீண்ட நேரம் காத்திருக்கும் வாகனங்கள்
x
தினத்தந்தி 16 July 2021 11:12 PM IST (Updated: 16 July 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பேரிகார்டுகள் இயங்காததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் ஊழியர்களுடன், வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அணைக்கட்டு

காத்திருந்த வாகனங்கள்

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடியை மிக விரைவாக கடக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலங்களில் அதிக அளவில் வாகனங்கள் செல்லாததால் கடந்த 9 மாதமாக பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. 

இந்த நிலையில் நேற்று ஆனி மாதம் நிறைவு பெறுவதால் பல்வேறு ஊர்களில் சுப விசேஷங்களுக்கு செல்வதற்காக அதிக வாகனங்கள் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. சுங்கச்சாவடியில் உள்ள தானியங்கி பேரிகாடுகள் சரிவர இயங்காததால் வாகனங்கள் நீண்ட தூரம் நின்றன. இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை தாக்க முயன்றனர். 

அப்போது பாஸ்டேக் முறையை கொண்டு வந்த பிறகும் அரை மணி நேரத்திற்கு மேல் வாகனங்களை ஏன்நிறுத்தி வைக்கிறீர்கள் என கேட்டு வாக்கு வாதம் செய்தனர்.

பேரிகார்டுகள் இயங்கவில்லை 

இதுகுறித்து சுங்கச்சாவடி மேலாளரிடம் கேட்டதற்கு நேற்று முதல் பாஸ்டேக் வழிகளில் உள்ள பேரிகாடுகள் சரிவர இயங்கவில்லை. அதை பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாகனங்கள் அதிக நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளை முதல் வழக்கம்போல் வாகனங்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்று கூறினார்.

Next Story