ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 16 July 2021 11:32 PM IST (Updated: 16 July 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் ரெயில் நிலையம் அருகே ஓடும் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை உறவினர்களுடன் பிரேத பரிேசாதனை செய்வதற்காக பெண் போலீஸ் ஒருவர் கொட்டும் மழையில் நடந்தே தூக்கிக்கொண்டு வந்தார்.

ஜோலார்பேட்டை,

ரெயில் முன் பாய்ந்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் வடபுதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் கோகுல்நாத் (வயது 18), ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்  
ன்ஜினியரிங் படித்து வந்தார். இவர் நேற்று அவரது கிராமத்து அருகே உள்ள பச்சகுப்பம் ரெயில் நிலையத்திற்கு சென்று அமர்ந்து இருந்தார் அப்போது பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி ரெயில் வந்து கொண்டு இருந்தது.

அநத ரெயில் முன் கோகுல்நாத் திடீரெ பாய்ந்து தற்கொைல செய்து கொண்டார். 

தூக்கி வந்தார்

தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் ஏட்டு உஷாராணி தலைைமயில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டனர். ரெயிலில் அடிபட்டதால் உடல் பல அடிக்கு சிதறி காணப்பட்டது.
இதனிடையே திடீரென மழை பெய்தது. ெகாட்டும் மழையில் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை கோணிப்பையில் சேகரித்து உறவினர்களுடன் பெண் போலீஸ் ஏட்டு உஷாராணி ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

குடும்ப பிரச்சினை காரணமாக ேகாகுல்நாத் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story