குமரியில் இன்று 34 இடங்களில் தடுப்பூசி முகாம்
குமரியில் இன்று 34 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
நாகர்கோவில்:
குமரியில் இன்று 34 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி முகாம்கள்
குமரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 34 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, கிள்ளியூர், தூத்தூர், இடைகோடு, குழித்துறை, கோதநல்லூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாகர்கோவில் டதி பள்ளி, தம்மத்துகோணம் சி.எம்.சி. பள்ளி, சால்வேசன் மிலிட்டரி பள்ளி ஆகியவற்றிலும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
குழித்துறை அரசு ஆஸ்பத்திரி, வடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் வெளிநாடு செல்வோருக்கான கோவிஷீல்டு 2-வது டோஸ் போடப்படுகிறது. வெட்டூர்ணிமடம் புனித அலோசியஸ் பள்ளியில் நடைபெறும் முகாமில் கோவேக்சின் 2-வது டோஸ் செலுத்தப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில் நடைபெறும் முகாம்களில் https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதள முகவரி மூலம் டோக்கன் வழங்கப்படுகிறது.
நேரடி டோக்கன்
பூதப்பாண்டி, கருங்கல், பத்மநாபபுரம் ஆகிய ஆரசு ஆஸ்பத்திரிகளிலும், நாகர்கோவில் இந்து கல்லூரியிலும் நடைபெறும் முகாமில் அனைத்து வயதினருக்கும் நேரடி டோக்கன் முறையில் கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். நாவல்காடு, புல்லுவிளை, பூலியூர்சாலை ஆகிய அரசு தொடக்கப்பள்ளிகளிலும், குளச்சல் புனித மேரி தொடக்கப்பள்ளி, குலசேகரன்புதூரில் உள்ள ஆசிரியர்களுக்கான கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், கன்னியாகுமரி, குளச்சல், சேனம்விளை, அருமனை, குலசேகரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகள், இடையன்கோட்டை புனித அந்தோணியார் பள்ளி, கொல்லங்கோடு ஸ்ரீதேவி மேல்நிலைப்பள்ளி, தேமானூர் புனித தாமஸ் நடுநிலைப்பள்ளி, பெருஞ்சிலம்பு அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் வடக்கு சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அனைத்து வயதினருக்கான கோவிஷீல்டு டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி முகாம்களில் டோக்கன்கள் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story