குமரியில் 4 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
குமரியில் 4 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் துணை நிலையில் உள்ள தாசில்தார்கள் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது தோவாளை தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அதிகாரியாக இருந்த குழந்தை ராணி நாச்சியார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தனித்துறை தாசில்தாராக (பறக்கும் படை) பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தனித்துறை தாசில்தாராக இருந்த மகேஷ் மாரியப்பன், தோவாளை தாசில்தார் அலுவலக வட்ட வழங்கல் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவியாளராக இருந்த குமார், திருவட்டார் தாலுகா தாசில்தார் அலுவலக வட்ட வழங்கல் அதிகாரியாகவும், திருவட்டார் தாலுகா தாசில்தார் அலுவலக வட்ட வழங்கல் அதிகாரியாக இருந்த முருகன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story