கடவூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
கடவூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
தரகம்பட்டி
தரகம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் கடவூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழுத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அலுவலர் பன்னீர் செல்வம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், கடவூர் ஒன்றியத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வார்டு கவுன்சிலர்கள் எடுத்து கூறினர். இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில், ஒன்றிய துணை பெருந்தலைவர் கைலாசம், வார்டு கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story