கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம்
கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
கரூர்
பொதுமக்கள் ஆர்வம்
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள கட்டாயம் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வருகின்றனர். மேலும் கொரோனா வைரசில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே சரியான ஆயுதம் என்பதை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தின.
கொரோனாவின் 2-ம் அலையில் ஏற்பட்ட அதிக உயிரிழப்புகள் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி
இதனால் தடுப்பூசி தட்டுப்பாடுகள் ஏற்பட்டு உள்ளன. எனவே தடுப்பூசி செலுத்தப்படும் நாட்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொள்கின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.
13 முகாம்கள்
அந்த வகையில் நேற்று கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கமேடு வி.வி.ஜி. நகர் அரசு பள்ளி, வெண்ணைமலை அய்யப்பன் கோவில் மண்டபம், காந்திகிராமம், வேடிச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குளித்தலை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரவக்குறிச்சி சடையப்பகவுண்டனூர் தொடக்கப்பள்ளி உள்பட 13 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் காலை முதல் காத்திருந்து, ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story