வங்கியில் கடன் வாங்கி தருவதாக வியாபாரியிடம் ரூ.1.33 கோடி மோசடி
வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.1 கோடியே 33 லட்சம் மோசடி செய்த பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மீது போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை
ஊராட்சிமன்ற தலைவர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது மோசடி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கோவையை சேர்ந்த டாக்டர் மாதேஸ்வரன் என்பவரிடம் மருத்துவமனை கட்டுவதற்கு கடன் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்த மர வியாபாரி தினேஷ் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
மோசடி
அதில், பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், தன்னிடம் கார் வாங்க வங்கியில் கடன் வாங்கி தர ஏற்பாடு செய்வதாக கூறி ரூ.1 கோடியே 33 லட்சம் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரிமன்னன் விசாரணை நடத்தி வந்தார். மேலும் பன்னீர்செல்வத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கனவே ஒரு வழக்கில் கோவை போலீசாரால் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கிலும் பன்னீர்செல்வத்தை கைது செய்ய புதுக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கோவை போலீசார் பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story