பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 17 July 2021 1:32 AM IST (Updated: 17 July 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணிடம் நகை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.எம்.டி. நகரை சேர்ந்தவர் திவ்யா (வயது 31). இவர் நேற்று அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் முக கவசம் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் திவ்யா அணிந்திருந்த 3 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது திவ்யா நகையை இறுக்கமாக பிடித்தார். இருப்பினும் மர்மநபர்கள் மிகவும் வேகமாக இழுத்ததால் திவ்யா கையில் ¼ பவுன் செயின் மட்டும் மாட்டிக்கொண்டது. இதையடுத்து மீதமுள்ள 2¾ பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.  இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் திவ்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலி செயினை பறித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் மர்மநபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story