மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மாயம்


மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மாயம்
x
தினத்தந்தி 17 July 2021 1:46 AM IST (Updated: 17 July 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மாயமானது.

காரியாபட்டி, 
காரியாபட்டி அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மொபின் ஜாக்சன் (வயது 33). இவர் நேற்று காரியாபட்டியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அவருடைய மோட்டார் சைக்கிளில் வைத்து பூட்டிவிட்டு காரியாபட்டி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு காய்கறி கடையில் காய் வாங்க சென்றார். பின்னர் வந்து பார்த்த போது பணத்தை காணவில்லை. இதுகுறித்து மொபின் ஜாக்சன் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story