ஓட்டல் ஊழியர்அடித்துக்கொலை
திருவையாறு அருகே ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
திருவையாறு;
திருவையாறு அருகே ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஓட்டல் ஊழியர்
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கண்டியூர் அன்பு நகரை சேர்ந்தவர் முகமதுபாரூக்(வயது51). இவருக்கு திருமணமாகி மும்தாஜ்பேகம் என்ற மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் கும்பகோணத்தில் வசித்து வந்தனர். கடந்த 6 மாதமாக முகமதுபாரூக் கண்டியூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
அடித்துக்கொலை
சம்பவத்தன்று இரவு கண்டியூர் குளத்துமேட்டுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் இளையராஜா (32) என்பவர் இரவு 12 மணிக்கு ஓட்டலுக்கு சென்று உணவு கேட்டுள்ளார். அப்போது முகமதுபாரூக்கு உணவு இல்லை என கூறினார். அப்போது முகமதுபாருக்- இளையராஜா இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் ஓட்டலில் கிடந்த இரும்பு ராடை எடுத்து முகமதுபாரூக் தலையில் இளையராஜா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முகமதுபாரூக்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமதுபாரூக் இறந்தார்.
கைது
இது குறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த இடத்தை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,
Related Tags :
Next Story