கர்நாடகத்தில் புதிதாக 1,806 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1,806 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பெங்களூரு:
மருத்துவ சிகிச்சை
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 908 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 1,806 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் 42 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 36 ஆயிரத்து 79 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 2,748 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 28 லட்சத்து 12 ஆயிரத்து 869 பேர் குணம் அடைந்து உள்ளனர். 31 ஆயிரத்து 399 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
15 மாவட்டங்களில்....
புதிதாக பெங்களூரு நகரில் 411 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தட்சிண கன்னடாவில் 225 பேர், மைசூருவில் 174 பேர், ஹாசனில் 138 பேர், சிவமொக்காவில் 110 பேர், உடுப்பியில் 105 பேர் உள்பட 1,806 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெங்களூரு நகர், தட்சிண கன்னடாவில் தலா 10 பேர் இறந்தனர்.
மைசூருவில் 5 பேர், கோலாரில் 3 பேர், பல்லாரி, பெலகாவி, சாம்ராஜ்நகரில் தலா 2 பேர், சிக்பள்ளாப்பூர், தார்வார், ஹாசன், குடகு, மண்டியா, சிவமொக்கா, துமகூரு, உத்தர கன்னடாவில் தலா ஒருவர் என 48 பேர் இறந்தனர். 15 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனாவுக்கு இறக்கவில்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து வருவது மாநில அரசையும், சுகாதாரத்துறையையும் மகிழ்ச்சி அடைய செய்து உள்ளது.
Related Tags :
Next Story