பயணிகள் முககவசம் அணியாவிட்டால் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை


பயணிகள் முககவசம் அணியாவிட்டால் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 17 July 2021 2:08 AM IST (Updated: 17 July 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

பயணிகள் முககவசம் அணியாவிட்டால் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்,
பயணிகள் முககவசம் அணியாவிட்டால் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொது போக்குவரத்து
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வரப்படுகின்றன.
அப்போது பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன. பஸ்களில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பயணிகளில் சிலர் முககவசம் அணியாமல் பஸ்சில் பயணம் செய்வதாகவும், இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடவடிக்கை
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், பொது போக்குவரத்து தொடங்கிய போது சேலம் மண்டலத்தில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் தற்போது 80 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு கடடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சில பயணிகள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என புகார் வருகிறது என்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், பயணிகள் முககவசம் அணிவதை டிரைவர், கண்டக்டர்கள் கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி பஸ்களில் பயணிகள் முககவசம் அணியாவிட்டால் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Next Story