கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு


கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 July 2021 2:08 AM IST (Updated: 17 July 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
மீண்டும் அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 155 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 168 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 31 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 100 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 28 பேரும், நகராட்சி பகுதிகளில் 4 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ஒன்றிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 5 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு இல்லை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 208 பேர் குணமடைந்துள்ளதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து 1,524 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 19 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறைஅதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story