சேலத்தில் பூ மார்க்கெட் செயல்பட தொடங்கியது


சேலத்தில் பூ மார்க்கெட் செயல்பட தொடங்கியது
x
தினத்தந்தி 17 July 2021 2:09 AM IST (Updated: 17 July 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பூ மார்க்கெட் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. முதல் நாள் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பூக்கள் வாங்கினர்.

சேலம்
சேலத்தில் பூ மார்க்கெட் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. முதல் நாள் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பூக்கள் வாங்கினர்.
பூ மார்க்கெட்
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை, விவசாயிகள் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இந்த பூ மார்க்கெட் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகே போஸ் மைதானத்தில் தற்காலிக பூ மார்க்கெட் அமைக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக இந்த பூ மார்க்கெட்டும், அங்குள்ள கடைகளும் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த தளர்வின்படி வ.உ.சி. பூ மார்க்கெட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
செயல்பட தொடங்கியது
இதை தொடர்ந்து பூ மார்க்கெட் நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. நேற்று ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் இன்று (சனிக்கிழமை) ஆடி பண்டிகைையயொட்டி நேற்று ஏராளமானவர்கள் பூக்கள் வாங்கிச்சென்றனர். தற்காலிக மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.400-க்கு விற்பனை ஆனது. மேலும் முல்லை ரூ.240, ஜாதிமல்லி ரூ.320, அரளி ரூ.140, வெள்ளை, மஞ்சள் அரளி தலா ரூ.160, சம்பங்கி ரூ.250, சாமந்தி ரூ.200-க்கு விற்பனை ஆனது.

Next Story