சங்ககிரி மலைக்கோட்டைக்கு செல்ல நேரக்கட்டுப்பாடு
சங்ககிரி மலைக்கோட்டைக்கு செல்ல நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சங்ககிரி
சங்ககிரி மலைக்கோட்டை பழமை வாய்ந்த புரதான சின்னம் ஆகும். மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைமீது சென்னகேசவ பெருமாள் கோவில், வரதராஜப்பெருமாள் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், முனியப்பன் கோவில் மற்றும் தர்கா உள்ளிட்டவை உள்ளன. இதனால் சங்ககிரி மலைக்கோட்டைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் சென்று வருகிறார்கள். இந்த கோட்டைக்கு செல்ல நுழைவுவாயிலில் கேட் எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால் எந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற நிலை காணப்பட்டது. தற்போது தொல்லியல் துறையினர் நுழைவு வாயில் முன்பு கேட் அமைத்துள்ளனர். தற்போது மலைக்கோட்டைக்கு சென்று வர நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story