2¼ கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உள்பட 4 பேர் கைது


2¼ கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 July 2021 6:14 AM IST (Updated: 17 July 2021 6:14 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்றதாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கே.கே.நகர், 
திருச்சியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகரை சேர்ந்த மல்லிகா (வயது 44), லட்சுமணன் (42) உள்பட 3 பேரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா  அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் கழிவறை அருகே கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக நவலடியானை (50) பாலக்கரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story