போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் பணியிட மாற்றம்
திருச்சி மாநகரத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 4 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி,
திருச்சி மாநகரத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 4 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் கோட்டை சட்டம் ஒழுங்குபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் அரசு மருத்துவமனைக்கும், காவல்கட்டுப்பாட்டு அறை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தில்லைநகர் போலீஸ் நிலையத்துக்கும், ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்குபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உறையூருக்கும், கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாசங்கரி எடமலைப்பட்டிபுதூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story