சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகம்
திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்றழைக்கப்படும் சிறுவாபுரி கிராமத்தில பாலகிருஷ்ண சாமி கோவில் உள்ளது. இக்கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.
இந்நிலையில், சிதிலமடைந்து காணப்பட்ட இந்த முருகன் கோவிலை சுமார் ரூ.25 லட்சம் செலவில் கிராம மக்கள் சீரமைத்தனர். அதைத்தொடர்ந்து, இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 11-ந் தேதி முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது.
நேற்று காலை மகா பூர்ணாஹுதி நடைபெற்ற பின்னர், புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, கோபுர கலசங்களுக்கு பட்டாச்சாரியார் முன்னிலையில், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சிராணிராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட பாலகிருஷ்ணசுவாமி முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்ததை சாலையின் இருபுறமும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் நின்று தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story